உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ரஞ்சி: தமிழக அணி திணறல்

ரஞ்சி: தமிழக அணி திணறல்

சென்னை: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணி ரன் சேர்க்க முடியாமல் திணறியது.இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் முதல்தர ரஞ்சி கோப்பை 89வது சீசன் நடக்கிறது. சென்னையில் நடக்கும் 'சி' பிரிவு லீக் போட்டியில் கர்நாடகா, தமிழகம் அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் கர்நாடகா அணி முதல் இன்னிங்சில் 288/5 ரன் எடுத்திருந்தது. படிக்கல் (151), ஹர்திக் ராஜ் (35) அவுட்டாகாமல் இருந்தனர்.இரண்டாம் நாள் ஆட்டத்தில் பிரதோஷ் ரஞ்சன் பால் பந்தில் தேவ்தத் படிக்கல் (151) அவுட்டானார். ஹர்திக் ராஜ் (51) அரைசதம் விளாசினார். ஸ்ரீனிவாஸ் ஷரத் (45) ஓரளவு கைகொடுத்தார். கர்நாடகா அணி முதல் இன்னிங்சில் 366 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தமிழகம் சார்பில் அஜித் ராம் 4, சாய் கிஷோர் 3 விக்கெட் சாய்த்தனர்.பின் முதல் இன்னிங்சை துவக்கிய தமிழக அணிக்கு விமல் குமார் (14), பிரதோஷ் ரஞ்சன் பால் (5) ஏமாற்றினர். நாராயண் ஜெகதீசன் (40) ஆறுதல் தந்தார். சுரேஷ் லோகேஷ்வர் (3), விஜய் சங்கர் (6), பூபதி குமார் (8), கேப்டன் சாய் கிஷோர் (2) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 129/7 ரன் எடுத்திருந்தது. பாபா இந்திரஜித் (35), முகமது (3) அவுட்டாகாமல் இருந்தனர். கர்நாடகா சார்பில் ஷஷி குமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி