உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சிறந்த வீரர் சிராஜ்: ஐ.சி.சி., விருதுக்கு தேர்வு

சிறந்த வீரர் சிராஜ்: ஐ.சி.சி., விருதுக்கு தேர்வு

துபாய்: ஐ.சி.சி., சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் சிராஜ் தேர்வானார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதுக்கு வேகப்பந்துவீச்சாளர்களான இந்தியாவின் முகமது சிராஜ், நியூசிலாந்தின் மாட் ஹென்றி, வெஸ்ட் இண்டீசின் ஜெய்டன் சீல்ஸ் பரிந்துரைக்கப்பட்டனர். இதில் சிறந்த வீரராக முகமது சிராஜ் தேர்வானார்.சமீபத்தில் லண்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்டில் 'வேகத்தில்' மிரட்டிய சிராஜ், இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் (4+5) சாய்த்தார். இப்போட்டியில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது. ஆட்ட நாயகன் விருதை சிராஜ் கைப்பற்றினார்.சிறந்த வீராங்கனையாக அயர்லாந்து 'ஆல்-ரவுண்டர்' ஆர்லா தேர்வானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ