உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தென் ஆப்ரிக்கா அபாரம்

தென் ஆப்ரிக்கா அபாரம்

கயானா: தென் ஆப்ரிக்க பவுலர்கள் அசத்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 144 ரன்னுக்கு சுருண்டது. ஹோல்டர் அரைசதம் விளாசினார்.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் கயானாவில் நடக்கிறது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 160 ரன் எடுத்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 97/7 ரன் எடுத்திருந்தது. ஹோல்டர் (33) அவுட்டாகாமல் இருந்தார்.இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜோமல் வாரிக்கன், ஜெய்டன் சீல்ஸ் 'டக்-அவுட்' ஆகினர். பொறுப்பாக ஆடிய ஜேசன் ஹோல்டர் அரைசதம் கடந்தார். இவருக்கு, ஷாமர் ஜோசப் ஒத்துழைப்பு தந்தார். பத்தாவது விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்த போது கேஷவ் மஹாராஜ் 'சுழலில்' ஷாமர் ஜோசப் (25) சிக்கினார். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 144 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஹோல்டர் (54) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் வியான் முல்டர் 4, பர்கர் 3, மகாஹராஜ் 2 விக்கெட் சாய்த்தனர். பின் 2வது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, ஒரு கட்டத்தில் 79/0 ரன் எடுத்து, 95 ரன் முன்னிலை பெற்றிருந்தது. டோனி (39), மார்க்ரம் (28) அவுட்டாகாமல் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ