உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி: டேவிட் மில்லர் அரைசதம்

தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி: டேவிட் மில்லர் அரைசதம்

நியூயார்க்: டேவிட் மில்லர் அரைசதம் கடந்து கைகொடுக்க தென் ஆப்ரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நியூயார்க்கில் நடந்த 'டி-20' உலக கோப்பை 'டி' பிரிவு லீக் போட்டியில் நெதர்லாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா 'பீல்டிங்' தேர்வு செய்தது. சைபிராண்ட் (40), லோகன் வான் பீக் (23) கைகொடுக்க நெதர்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 103 ரன் எடுத்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் பார்ட்மன் 4 விக்கெட் கைப்பற்றினார்.சுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக் (0), ஹென்டிரிக்ஸ் (3), கேப்டன் மார்க்ரம் (0), கிளாசன் (4) ஏமாற்றினர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (33) நம்பிக்கை தந்தார். பாஸ் டி லீட் பந்தில் வரிசையாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய டேவிட் மில்லர் (59*) அரைசதம் கடந்து வெற்றியை உறுதி செய்தார்.தென் ஆப்ரிக்க அணி 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 106 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை