மேலும் செய்திகள்
இரானி கோப்பை: விதர்பா சாம்பியன்
23 hour(s) ago
விதர்பா அணி ஆதிக்கம் * இரானி கோப்பையில்...
04-Oct-2025
புதிய கேப்டன் சுப்மன் கில்
03-Oct-2025 | 1
காலே: இலங்கை கிரிக்கெட் வீரர் தம்மிகா நிரோஷனா சுட்டுக் கொல்லப்பட்டார்.இலங்கை கிரிக்கெட் அணியின் (19 வயது) முன்னாள் கேப்டன் தம்மிகா நிரோஷனா 41. வேகப்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டரான' இவர், 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில், 2000ல் அறிமுகமானார். நியூசிலாந்தில் 2002ல் நடந்த ஜூனியர் உலக கோப்பையில் (19 வயது) இலங்கை அணியை வழிநடத்தினார்.உபுல் தரங்கா, மாத்யூஸ், தம்மிகா பிரசாத், ஜீவன் மெண்டிஸ், பர்வீஸ் மகரூப் உள்ளிட்டோர் இவரது தலைமையில் விளையாடினர். இத்தொடரில் 5 போட்டியில், 7 விக்கெட் சாய்த்தார். இலங்கை அணி 'சூப்பர் லீக்' 2வது சுற்று வரை சென்றது. சீனியர் அணியில் இடம் கிடைக்காத இவர், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது 21வது வயதில் (2004) கிரிக்கெட்டில் இருந்து விலகினார்.காலேயின் அம்பலங்கோடாவில் உள்ள தனது வீட்டில் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் தம்மிகா நிரோஷனா வசித்து வந்தார். நேற்று இவர், வீட்டின் வெளியே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். யார் கொன்றது, கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் இலங்கை கிரிக்கெட்டில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
23 hour(s) ago
04-Oct-2025
03-Oct-2025 | 1