உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சுப்மன் கில், ருதுராஜ் கேப்டன்: துலீப் டிராபி அணிகளுக்கு

சுப்மன் கில், ருதுராஜ் கேப்டன்: துலீப் டிராபி அணிகளுக்கு

புதுடில்லி: துலீப் டிராபி தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் முதல் தர போட்டி தொடரான துலீப் டிராபி (செப். 5--22) நடக்கவுள்ளது. மொத்தம் 4 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு கோப்பை வழங்கப்படும்.இந்திய அணி, வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் (சென்னையில் செப். 19-23, கான்பூரில் செப். 27-அக். 1) கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கு தயாராகும் விதமாக சீனியர் வீரர்கள் சிலர் துலீப் டிராபியில் பங்கேற்கின்றனர். ரோகித் சர்மா, விராத் கோலி, அஷ்வின், பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.இத்தொடரில் பங்கேற்கும் 4 அணிகள் அறிவிக்கப்பட்டன. இந்தியா 'ஏ' அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தவிர இந்த அணியில் மயங்க் அகர்வால், குல்தீப் யாதவ், லோகேஷ் ராகுல், திலக் வர்மா, ஷிவம் துபே, அவேஷ் கான் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.இந்தியா 'பி' அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் கேப்டனாக உள்ளார். ஜெய்ஸ்வால், ரிஷாப் பன்ட், சர்பராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், ரவிந்திர ஜடேஜா, முகமது சிராஜ், சாய் கிஷோர் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.இந்தியா 'சி' அணியை ருதுராஜ் கெய்க்வாட் வழிநடத்துகிறார். தவிர இந்த அணிக்கு சூர்யகுமார் யாதவ், சாய் சுதர்சன், பாபா இந்திரஜித் உள்ளிட்டோர் தேர்வாகினர்.இந்தியா 'டி' அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். தவிர இந்த அணியில் தேவ்தத் படிக்கல், இஷான் கிஷான், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் இடம் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை