உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சுப்மன் புதிய கேப்டன்: இந்திய அணி அறிவிப்பு

சுப்மன் புதிய கேப்டன்: இந்திய அணி அறிவிப்பு

புதுடில்லி: ஜிம்பாப்வே தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.ஜிம்பாப்வே செல்லவுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் (ஜூலை 6, 7, 10, 13, 14, இடம்: ஹராரே) கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்று வரும் சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராத் கோலி, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார், ரவிந்திர ஜடேஜா, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைத்துள்ளது. டிராவிட் பதவிக்காலம் முடிந்த நிலையில், இடைக்கால பயிற்சியாளராக லட்சுமண் செயல்படுவார்.இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

MADHAVAN
ஜூலை 01, 2024 11:50

இந்திய கிரிக்கெட் சகாப்தம் சப் மண் கில்லொடு முடிந்துவிடும், இந்த டீமை வைத்து ஜிம்பாபே, நேபால் அமெரிக்கா போன்ற அணியைக்கூட வெல்ல முடியாது,


MUNI VK
ஜூன் 26, 2024 22:25

பந்து வீச்சாளர்கள் தேர்வு சரியில்லை....


bharathidhasan
ஜூன் 25, 2024 18:41

வாழ்த்துக்கள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை