மேலும் செய்திகள்
ஜிம்பாப்வே, நமீபியா தகுதி * உலக கோப்பை டி-20 தொடருக்கு
5 hour(s) ago
விதர்பா அணி முன்னிலை: இரானி கோப்பையில்
5 hour(s) ago
விதர்பா அணி அபாரம்: இரானி கோப்பையில்
02-Oct-2025
துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துபாயில் வெளியிட்டது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், 842 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இவர், 'டி-20' உலக கோப்பையில் 6 போட்டியில், 149 ரன் மட்டும் எடுத்துள்ளார். இத்தொடரில் பேட்டிங்கில் அசத்திய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (255 ரன், 7 போட்டி) 844 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்து 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். இருப்பினும் உலக கோப்பை அரையிறுதி, பைனலில் சூர்யகுமார் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றலாம்.
பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அக்சர் படேல் (647 புள்ளி) 8வது இடத்துக்கு முன்னேறினார். இருபது இடங்கள் முன்னேறிய மற்றொரு இந்திய 'சுழல்' வீரர் குல்தீப் யாதவ் (641) 11வது இடத்தை கைப்பற்றினார். இந்திய வேகப்பந்துவீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங் (17வது இடம், 621 புள்ளி), பும்ரா (24வது இடம், 589 புள்ளி) முன்னேற்றம் கண்டனர்.
'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (213 புள்ளி), 7வது இடத்தில் இருந்து 'நம்பர்-3' இடத்துக்கு முன்னேறினார். முதலிரண்டு இடத்தை இலங்கையின் ஹசரங்கா (222), ஆப்கானிஸ்தானின் முகமது நபி (214) கைப்பற்றினர்.
5 hour(s) ago
5 hour(s) ago
02-Oct-2025