| ADDED : ஜூன் 18, 2024 11:08 PM
ஆன்டிகுவா: 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8 சுற்று இன்று துவங்குகிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மோதுகின்றன.வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. மொத்தம் பங்கேற்ற 20 அணிகளில் 12 அணிகள் லீக் சுற்றுடன் திரும்பின. மீதமுள்ள 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 'சூப்பர்-8 மோதல் நடக்கிறது. இன்று ஆன்டிகுவாவில் (நார்த் சவுண்டு) நடக்கும் போட்டியில் தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா மோதுகின்றன.தென் ஆப்ரிக்க அணி லீக் சுற்றில் சவாலான நியூயார்க் மைதானத்தில் 3, கிங்ஸ்டவுனில் 1 என 4 போட்டியில் பங்கேற்றது. ஒன்றில் கூட (80/4, 106/6, 113/6, 115/7) 120 ரன்னை எட்டவில்லை. நேபாளத்துக்கு எதிராக போராடி, 1 ரன்னில் தான் வென்றது. குயின்டன் டி காக், ஹென்ரிக்ஸ், மார்க்ரம் பேட்டிங்கில் கைகொடுத்தால் நல்லது.பவுலிங்கில் இத்தொடரில் அதிக விக்கெட் சாய்த்த நார்ட்ஜே (9), பார்ட்மென், ரபாடா கூட்டணி அணியை கரை சேர்ப்பது பலம்.முதன் முறை'டி-20' உலக கோப்பை தொடரில் முதன் முறையாக களமிறங்கிய அமெரிக்கா, முதல் போட்டியில் 197/3, 159/3 ரன்னை சேஸ் செய்து வென்றது. பாகிஸ்தானை சாய்த்து 'சூப்பர்-8' சுற்றுக்கும் முன்னேறியது. 8 இந்தியர், 2 பாகிஸ்தான், தலா ஒரு வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, நெதர்லாந்து வீரர்கள் கலந்த கலவையாக மிரட்டுகிறது. கேப்டன் மோனன்க் படேல் காயத்தில் இருந்து மீண்டு வரலாம். தவிர ஜோன்ஸ், ஹர்மீத் சிங், நிதிஷ் குமார் என பலர் போராட காத்திருக்கின்றனர்.