உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தமிழக அணி அசத்தல்: புச்சி பாபு கிரிக்கெட்டில்

தமிழக அணி அசத்தல்: புச்சி பாபு கிரிக்கெட்டில்

சேலம்: தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சேலத்தில் நடக்கும் 'பி' பிரிவு லீக் போட்டியின் முதல் நாள் முடிவில் டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் லெவன் அணி 283/6 ரன் எடுத்திருந்தது. நேற்றைய 2ம் நாள் ஆட்டத்தில் முகமது அலி 182 ரன் விளாசினார். டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் அணி முதல் இன்னிங்சில் 459 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.ஆட்டநேர முடிவில் இந்தியன் ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்சில் 185/2 ரன் எடுத்திருந்தது. பிரதம் சிங் (104) அவுட்டாகாமல் இருந்தார்.சாய் கிஷோர் அசத்தல்: கோவையில் நடக்கும் 'சி' பிரிவு லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் பாபா இந்திரஜித் (167) கைகொடுக்க டி.என்.சி.ஏ., லெவன் அணி 393 ரன் எடுத்தது. ஆட்டநேர முடிவில் ஹரியானா அணி முதல் இன்னிங்சில் 182/6 ரன் எடுத்திருந்தது. டி.என்.சி.ஏ., சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட் சாய்த்தார்.கடின இலக்கு: திண்டுக்கல், நத்தத்தில் நடக்கும் 'டி' பிரிவு லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் பரோடா 255 ரன் எடுத்தது. ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 114 ரன்னுக்கு சுருண்டது. பின் 2வது இன்னிங்சில் பரோடா அணி 254 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பின், 396 ரன் என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய காஷ்மீர் அணி, ஆட்டநேர முடிவில் 14/0 ரன் எடுத்திருந்தது.ஐதராபாத் '293': திருநெல்வேலியில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜார்க்கண்ட் அணி 178 ரன் எடுத்தது. ராகுல் சிங் (56), மிலிந்து (58*) கைகொடுக்க ஐதராபாத் அணி முதல் இன்னிங்சில் 293 ரன் எடுத்தது. ஆட்டநேர முடிவில் ஜார்க்கண்ட் அணி 2வது இன்னிங்சில் 24/3 ரன் எடுத்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை