மேலும் செய்திகள்
ஸ்மிருதி மந்தனா நம்பர்-1 * ஐ.சி.சி., தரவரிசையில்...
1 hour(s) ago
இளம் இந்தியா முன்னிலை
1 hour(s) ago
ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க் * இந்திய தொடருக்காக...
1 hour(s) ago
பிரிட்ஸ் சதம்: தென் ஆப்ரிக்கா அபாரம்
06-Oct-2025
நத்தம்: திருச்சிக்கு எதிராக 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருப்பூர் அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது.திண்டுக்கல், நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் திருப்பூர், திருச்சி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருச்சி அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக் (18), பாலசந்தர் அனிருத் (19) ஆறுதல் தந்தனர். மான் பாப்னா (50), கணேஷ் (39) கைகொடுத்தனர். திருப்பூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன் எடுத்தது. ராமலிங்கம் ரோகித் (13), புவனேஸ்வரன் (2) அவுட்டாகாமல் இருந்தனர். திருச்சி அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன் 4 விக்கெட் சாய்த்தார்.சவாலான இலக்கை விரட்டிய திருச்சி அணி 16.5 ஓவரில் 122 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. நிர்மல் குமார் (46) ஆறுதல் தந்தார். திருப்பூர் அணி சார்பில் நடராஜன், அஜித் ராம் தலா 3 விக்கெட் சாய்த்தனர். நான்காவது வெற்றியை பதிவு செய்த திருப்பூர் 8 புள்ளிகளுடன் 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தது. ஏற்கனவே கோவை, சேப்பாக்கம், திண்டுக்கல் முன்னேறின.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
06-Oct-2025