மேலும் செய்திகள்
ஜிம்பாப்வே, நமீபியா தகுதி * உலக கோப்பை டி-20 தொடருக்கு
9 hour(s) ago
விதர்பா அணி முன்னிலை: இரானி கோப்பையில்
9 hour(s) ago
விதர்பா அணி அபாரம்: இரானி கோப்பையில்
02-Oct-2025
புரோவிடன்ஸ்:உகாண்டாவை 39 ரன்னுக்கு சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ், 134 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.வெஸ்ட் இண்டீசின் கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் மைதானத்தில் நடந்த 'டி-20' உலக கோப்பை 'சி' பிரிவு லீக் போட்டியில் உகாண்டா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜான்சன் சார்லஸ் (44) நல்ல துவக்கம் தந்தார். பூரன் (22), கேப்டன் பாவெல் (23), ரூதர்போர்டு (22), ரசல் (30*) கைகொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ரன் எடுத்தது.சவாலான இலக்கை விரட்டிய உகாண்டா அணி 12 ஓவரில் 39 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. ஜுமா மியாகி (13*) மட்டும் இரட்டை இலக்க ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் 'சுழலில்' அசத்திய அகேல் ஹொசின் 5 விக்கெட் சாய்த்தார். முதல் போட்டியில் பப்புவா நியூ கினியாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ், தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது.
'டி-20' உலக கோப்பையில் ஒரு இன்னிங்சில் குறைந்த ஸ்கோரை (39 ரன்) பதிவு செய்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை நெதர்லாந்துடன் (எதிர்: இலங்கை, 2014, இடம்: சாட்டோகிராம்) பகிர்ந்து கொண்டது உகாண்டா.
'டி-20' உலக கோப்பை அரங்கில் அதிக ரன் (134) வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 2வது அணியானது வெஸ்ட் இண்டீஸ். ஏற்கனவே இலங்கை அணி 172 ரன் வித்தியாசத்தில் (எதிர்: கென்யா, 2007, இடம்: ஜோகனஸ்பர்க்) வென்றிருந்தது.
'சுழலில்' அசத்திய அகேல் ஹொசின் (5/11), 'டி-20' அரங்கில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த 2வது வெஸ்ட் இண்டீஸ் பவுலரானார். முதலிடத்தில் ஒபெத் மெக்காய் (6/17, எதிர்: இந்தியா, 2022) உள்ளார்.
9 hour(s) ago
9 hour(s) ago
02-Oct-2025