மேலும் செய்திகள்
இரானி கோப்பை: விதர்பா சாம்பியன்
3 hour(s) ago
விதர்பா அணி ஆதிக்கம் * இரானி கோப்பையில்...
04-Oct-2025
புதிய கேப்டன் சுப்மன் கில்
03-Oct-2025 | 1
மவுன்ட் மவுன்கனுய்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வில்லியம்சன் மீண்டும் சதம் விளாசினார். நியூசிலாந்து அணி 528 ரன் முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட 'டாங்கிவாய்' கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மவுன்ட் மவுன்கனுயில் முதல் டெஸ்ட் நடக்கிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 511 ரன் குவித்தது. இரண்டாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 80/4 ரன் எடுத்து, 431 ரன் பின்தங்கி இருந்தது. பெடிங்ஹாம் (29), பீட்டர்சன் (2) அவுட்டாகாமல் இருந்தனர்நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. பெடிங்காம் 32 ரன்னில் அவுட்டாக, பீட்டர்சன் 45 ரன் எடுத்தார். ஒலிவியர் (15) மற்றவர்கள் அணியை கைவிட்டனர். தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு சுருண்டது.
முதல் இன்னிங்சில் 349 ரன் முன்னிலை பெற்ற போதும், 'பாலோ ஆன்' கொடுக்காமல், நியூசிலாந்து களமிறங்கியது. இம்முறை டாம் லதாம் (3), கான்வே (29), ரச்சின் (12) நிலைக்கவில்லை. முதல் இன்னிங்சில் 118 ரன் எடுத்த 'சீனியர்' வில்லியம்சன், இரண்டாவது இன்னிங்சிலும் சதம் விளாசினார். இவர் 109 ரன்னில் அவுட்டானார். மூன்றாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 179/4 ரன் எடுத்து, 528 ரன் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் இருநாள் மீதமுள்ளதால் இப்போட்டியில் தென் ஆப்ரிக்கா தப்புவது கடினமே.
3 hour(s) ago
04-Oct-2025
03-Oct-2025 | 1