உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்குவாஷ்: அனாஹத் அபாரம்

ஸ்குவாஷ்: அனாஹத் அபாரம்

ரத்மலானா: சர்வதேச ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் அனாஹத் சிங் சாம்பியன் ஆனார்.இலங்கையில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடந்தது. இதில் பெண்களுக்கான பிரிவு பைனலில், இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் இளம் வீராங்கனை அனாஹத் சிங், 'நம்பர்-3' ஆக இருந்த இலங்கையின் சன்நித்மாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 11-0 என எளிதாக வென்ற அனாஹத், அடுத்த செட்டை 11-1 என வசப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இவர், மூன்றாவது செட்டை 11-4 என கைப்பற்றினார்.முடிவில் அனாஹத் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ