| ADDED : ஜூலை 27, 2024 11:12 PM
பாரிஸ்: ஒலிம்பிக் வரலாற்றில் கடந்த 1988 சியோல் போட்டி முதல் வில்வித்தை அறிமுகம் ஆனது. ஒவ்வொரு முறை நம்பிக்கையுடன் களமிறங்கும் இந்தியா நட்சத்திரங்கள், இதுவரை ஒருமுறை கூட காலிறுதி போட்டியை தாண்டியது இல்லை.தற்போது 12 ஆண்டுக்குப் பின் இந்தியா சார்பில் முழு அளவில் வில்வித்தை அணியினர் (6 பேர்) களமிறங்கியுள்ளனர். இதற்கான தகுதிச்சுற்றில் இந்திய ஆண், பெண்கள் அணிகள் 3, 4வது இடம் பெற்று, நேரடியாக காலிறுதிக்கு முன்னறியது. கலப்பு இரட்டையரிலும் காலிறுதிக்கு தகுதி பெற்றது.இன்று பெண்கள் அணிகளுக்கான போட்டி நடக்கிறது. இந்தியாவின் அன்கிதா, தீபிகா குமாரி, பஜன் கவுர் கூட்டணி இன்னும் இரண்டு வெற்றி பெற்றால் போதும். ஒலிம்பிக் வில்வித்தையின் 32 ஆண்டு வரலாற்றில் இந்தியா முதல் பதக்கம் கைப்பற்றி விடலாம்.