உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஆசிய குத்துச்சண்டை: அரையிறுதியில் நிகில்

ஆசிய குத்துச்சண்டை: அரையிறுதியில் நிகில்

அஸ்தானா: ஆசிய குத்துச்சண்டை (22 வயது) அரையிறுதிக்கு இந்தியாவின் நிகில், அஜய் குமார், அங்குஷ், ஜதுமணி சிங் முன்னேறினர்.கஜகஸ்தானில் ஆசிய யூத், 22 வயதுக்குட்பட்டோருக்கான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் 22 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 57 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் நிகில், உஸ்பெகிஸ்தானின் பக்தியோரோவ் அயுப்கோன் மோதினர். அபாரமாக ஆடிய நிகில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.அடுத்து நடந்த 51 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜதுமணி சிங் 5-0 என பூடானின் புன்ட்ஷோ கின்லேவை வீழ்த்தினார். மற்ற எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அஜய் குமார் (63.5 கிலோ), அங்குஷ் (71 கிலோ) முறையே மங்கோலியாவின் டாம்டின்டோர்ஜ், தென் கொரியாவின் லீ ஜு சாங்கை தோற்கடித்தனர்.மற்றொரு இந்திய வீரர் ஆஷிஸ் 2-3 என மங்கோலியாவின் ஓயுன் எர்டினிடம் தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ