| ADDED : ஏப் 27, 2024 10:47 PM
துபாய்: ஆசிய தடகளத்தில் லக்சிதா வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். துபாயில் 21வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் (20 வயதுக்கு உட்பட்டோர்) நடக்கிறது. பெண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் லக்சிதா சண்டிலியா(2 நிமிடம், 07.10 வினாடி) வெள்ளிப்பதக்கம் வென்றார். கலப்பு 4*400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் பிரமோத், கனிஸ்டா, நவ்பிரீத் சிங், சந்திரமோல் அடங்கிய அணி (3 நிமிடம், 24.86 வினாடி) வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது. பெண்களுக்கான 400 மீ., தடை ஓட்டத்தில் இந்தியாவின் ஸ் ரீயா ராஜேஷ்(59.20 வினாடி)வெண்கலப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான போல் வால்ட் போட்டியில் இந்தியாவின் தேவ் குமார் மீனா(5.10 மீ., உயரம்) வெண்கலம் கைப்பற்றினார். பெண்களுக்கான ஹெப்டத்லான் 200 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் பாவனா (24.81 வினாடி) இரண்டாவது இடம் பிடித்தார். குண்டு எறிதலில் இவர், 10.76 மீ., துாரம் எறிந்து முதலிடம் பிடித்தார். பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தின் பைனலுக்கு இந்தியாவின் உன்னதி, சபிதா முன்னேறினர்.இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கம் வென்ற இந்தியா, பட்டியலில் இரண்டாவதாக உள்ளது. சீனா (12 தங்கம், 8 வெள்ளி, 1 வெண்கலம்) முதலிடத்தில் உள்ளது.