உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / காஸ்ட்லி வீரர் சச்சின்: புரோ கபடி ஏலத்தில்

காஸ்ட்லி வீரர் சச்சின்: புரோ கபடி ஏலத்தில்

மும்பை: புரோ கபடி லீக் வீரர்கள் ஏலத்தில் தமிழ் தலைவாஸ் அணி சச்சினை ரூ. 2.15 கோடிக்கு வாங்கியது.மும்பையில், புரோ கபடி லீக் 11வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடந்தது. முதல் நாள் நடந்த ஏலத்தில், தமிழ் தலைவாஸ் அணி சச்சின் தன்வரை அதிகபட்சமாக ரூ. 2.15 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இவர், கடந்த முறை பாட்னா அணிக்காக விளையாடினார். புரோ கபடி லீக் வீரர்கள் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு (ரூ. 2.605 கோடி, 2023) ஒப்பந்தமான பவான் ஷெராவத்தை, ரூ. 1.725 கோடிக்கு தெலுங்கு டைட்டன்ஸ் (ஐதராபாத்) அணி தட்டிச் சென்றது. முதல் நாள் ஏலத்தில், 7 இந்திய வீரர்கள் உட்பட 8 பேர், தலா ரூ. ஒரு கோடிக்கு அதிகமாக பல்வேறு அணிகளில் ஒப்பந்தமாகினர்.நேற்று, இரண்டாம் நாள் ஏலம் நடத்தப்பட்டது. இதில் அஜித் குமார், ரூ. 66 லட்சத்திற்கு புனே அணியில் ஒப்பந்தமானார். கடந்த 2019ல் தமிழ் தலைவாஸ் அணியில் அறிமுகமான இவர், அதன்பின் மும்பை, ஜெய்ப்பூர் அணிகளுக்காக பங்கேற்றார். மற்றொரு இந்திய 'ரெய்டர்' ஜெய் பகவான், ரூ. 63 லட்சத்திற்கு பெங்களூரு அணியில் இணைந்தார்.'ஆல்-ரவுண்டர்' குர்தீப் சிங் (ரூ. 59 லட்சம்), தீபக் ராஜேந்தர் சிங்கை (ரூ. 50 லட்சம்) பாட்னா அணி தட்டிச் சென்றது. பவாஜி ராஜ்புட் ரூ. 43 லட்சத்திற்கு உ.பி., அணியில் ஒப்பந்தமானார்.நேற்று கடைசியாக ஏலத்தில் வந்த நவ்னீத்தை ரூ. 13 லட்சத்திற்கு ஜெய்ப்பூர் அணி வாங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ