உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ்: ஹம்பி அபாரம்

செஸ்: ஹம்பி அபாரம்

புதுடில்லி: மொனாக்கோவில் பெண்களுக்கான கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் ஹம்பி, ஹரிகா உட்பட மொத்தம் 10 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். நேற்று மூன்றாவது சுற்று போட்டி நடந்தது. இந்தியாவின் கோனேரு ஹம்பி, மங்கோலியாவின் பத்குயாக்கை சந்தித்தார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி, 40 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹரிகா, ரஷ்யாவின் கேத்ரினாவை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாவிய ஹரிகா, 34 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். முதல் மூன்று சுற்று முடிவில் பத்குயாக், ஹம்பி, கேத்தரினா தலா 2.0 புள்ளியுடன் 'டாப்-3' இடத்தில் உள்ளனர். ஹரிகா (0.5) கடைசி இடத்தில் (10 வது) உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை