மேலும் செய்திகள்
சிந்துவுக்கு கடின சவால்: டென்மார்க் ஓபன் பாட்மின்டனில்
13 hour(s) ago
எக்ஸ்டிராஸ்
13 hour(s) ago
‘ரவுண்ட்–அப்’
13 hour(s) ago
எக்ஸ்டிராஸ்
11-Oct-2026
சீன ஓபன் டென்னிஸ்: கின்வென் ஜெங் சாம்பியன்
11-Oct-2026
புவனேஸ்வர்: பெடரேஷன் கோப்பை தடகளத்தின், போல் வால்ட் போட்டியில் தமிழக வீராங்கனைகள் ரோசி மீனா, பரனிகா முறையே தங்கம், வெள்ளி வென்றனர். தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடக்கிறது. பெண்களுக்கான போல் வால்ட் போட்டி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற தமிழகத்தின் ரோசி மீனா, 4.05 மீ., உயரம் தாண்டி, முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் கைப்பற்றினார். தமிழகத்தின் மற்றொரு வீராங்கனை பரனிகா, 4.00 மீ., உயரம் தாண்ட, இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் தட்டிச் சென்றார். கேரளாவின் மரியா (3.90 மீ.,) வெண்கலம் கைப்பற்றினார். தமிழகத்தின் சத்யா (3.90 மீ.,) நான்காவது இடம் பிடித்தார். பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் தகுதிச்சுற்றில் அசத்திய தமிழகத்தின் வித்யா, சுபா, நாதலியா பைனலுக்கு முன்னேறினர். ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் பைனலுக்கு தமிழக வீரர் ஆகாஷ் குமார், சந்தோஷ் குமார் தகுதி பெற்றனர். குண்டு எறிதல், உயரம் தாண்டுதல் 100 மீ., தடை ஓட்டம் உட்பட எட்டு பிரிவுகள் இடம் பெற்ற பெண்களுக்கான 'ஹெப்டத்லான்' போட்டி நடக்கிறது. இதுவரை முடிந்த போட்டிகள் முடிவில் தமிழகத்தின் தீபிகா, 2810 புள்ளி பெற்று, மூன்றாவது இடத்தில் உள்ளார். ஆண்களுக்கான 100 மீ., ஓட்டம் நடந்தது. இதன் மூன்றாவது தகுதிச்சுற்றில் தமிழகத்தின் கிட்சன், 10.81 வினாடி நேரத்தில் வந்து இரண்டாவது இடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறினார். நீரஜ் எதிர்பார்ப்பு இன்று நடக்கும் ஈட்டி எறிதல் பைனலில் உலக சாம்பியன் நீரஜ் சோப்ரா, ஹரியானா அணிக்காக களமிறங்குகிறார். இவர் தங்கம் வென்று அசத்த காத்திருக்கிறார். இவருக்கு ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற ஒடிசா வீரர் கிஷோர் குமார் ஜெனா சவால் தரலாம். நேற்று நடந்த தகுதிச்சுற்றில் 'டாப்-3' இடம் பிடித்த பிபின் ஆன்டனி (76.61 மீ.,), விகாஷ் யாதவ் (72.01 மீ.,), விவேக் குமார் (70.38 மீ.,) சாதிக்க முயற்சிக்கலாம்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
11-Oct-2026
11-Oct-2026