உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / வெள்ளி வென்றார் பவானி தேவி * வாள் சண்டை போட்டியில்...

வெள்ளி வென்றார் பவானி தேவி * வாள் சண்டை போட்டியில்...

இஸ்தான்புல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் 'சீனியர்' சாப்ரே சேட்டிலைட் வாள் சண்டை போட்டி நடந்தது. இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார். இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற பவானி தேவி, அரையிறுதியில், உலக சாம்பியன்ஷிப்பில் இருமுறை தங்கம் வென்ற, உலகின் 'நம்பர்-5', கிரீசின் தேஸ்பினாவை 15-13 என வீழ்த்தினார். அடுத்து நடந்த பைனலில் பவானி தேவி, உள்ளூர் வீராங்கனை (துருக்கி) நிசானுர் எர்பிலை எதிர்கொண்டார். இதில் கடும் போராட்டத்துக்குப் பின் 12-15 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தினார். கிரீசின் தேஸ்பினா, சிங்கப்பூரின் ஹெங் ஜூலியட், வெண்கலம் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை