உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / கடலில் மிதக்கும் ஒலிம்பிக் கிராமம்

கடலில் மிதக்கும் ஒலிம்பிக் கிராமம்

பாரிஸ் ஒலிம்பிக் பல்வேறு புதுமைகளை கொண்டுள்ளது. துவக்கவிழா, முதன் முறையாக மைதானத்துக்கு வெளியே நடந்தது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக எரிபொருள் எதுவும் பயன்படுத்தப்படாமல், நுாறு சதவீதம் எலக்ட்ரிக் ஒலிம்பிக் ஜோதி உருவாக்கப்பட்டுள்ளது.தவிர பாரிசில் இருந்து 15,700 கி.மீ., துாரத்தில், பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள, தஹிதியில் நீர்ச்சறுக்கு போட்டி நடக்கின்றன. ஒலிம்பிக் போட்டி இப்படி நீண்ட துாரத்தில் நடப்பதும் இது தான் முதன் முறை.இதனால் நீர்ச்சறுக்கு போட்டியில் பங்கேற்கும் 20 நாடுகளை சேர்ந்த, 48 நட்சத்திரங்கள், பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் தங்க முடியாது. தவிர 'தி எண்டு ஆப் தி ரோடு' என்றழைக்கப்படும் தஹிதியில் உள்ள சிறிய கிராமம் 'டியாஹுபோவில்' இவர்கள் தங்குவதற்கு போதிய வசதிகள் இல்லை.இதையடுத்து புதிய முயற்சியாக, 'அரானுய்-5' என்ற ஐந்து அடுக்கு கப்பல் ஒன்று தஹிதிக்கு 10 கி.மீ., துாரத்தில் கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. 413 அடி உயரமுள்ள இந்த மிதக்கும் 'ஒலிம்பிக் கிராமத்தில்' தான் வீரர், வீராங்கனைகள் தங்குகின்றனர். இங்கு இரண்டு படுக்கை கொண்ட சாதாரண அறையில், ஒருவர் 12 நாள் தங்குவதற்கு ரூ. 4.8 லட்சம் செலவாகிறது.இங்கிருந்து போட்டி நடக்கும் இடத்துக்கு 30 நிமிடத்தில் படகில் செல்கின்றனர்.நியூசிலாந்து வீராங்கனை பில்லி ஸ்டெய்ர்மான்ட் கூறுகையில்,''கப்பலில் தங்குவது இதுதான் முதன்முறை. ஜிம் உள்ளிட்ட போதிய வசதிகளுடன் அறைகள் உள்ளன. இது வியப்பாக உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை