மேலும் செய்திகள்
தமிழ் தலைவாஸ் அணி தோல்வி: புரோ கபடி லீக் போட்டியில்
18 hour(s) ago
உலக விளையாட்டு செய்திகள்
18 hour(s) ago
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
ஜெர்மனியின் பெர்லின் நகரில் 11வது ஒலிம்பிக் போட்டி (1936, ஆக. 1-16) நடந்தது. மொத்தம் 49 நாடுகளை சேர்ந்த 3963 பேர் (3632 வீரர், 331 வீராங்கனைகள்) பங்கேற்றனர். 19 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இவை முதன் முறையாக 'டிவி'யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. 70 மணி நேரம் நீடித்த இந்த ஒளிபரப்பை, மக்கள் இலவசமாக காண 25 இடங்களில் ராட்சத திரைகள் வைக்கப்பட்டு இருந்தன. இதை பெர்லின், போஸ்டாம் நகரங்களில் இருந்த மக்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.இப்போட்டியை ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர் தனது கொள்கைகளையும், இனத்தின் ஆதிக்கத்தையும் நிருபிப்பதற்காக பயன்படுத்த நினைத்தார். ஆனால், அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஏவெரி பிரன்டேஜ், விளையாட்டில் அரசியலுக்கு இடமில்லை என போர்க் கொடி உயர்த்தினார். இதனால் ஹிட்லரின் எண்ணம் நிறைவேறாமல் போனது.
ஆண்களுக்கான ஹாக்கி பைனலில் தயான் சந்த், ரூப் சிங், அலி தாரா உள்ளிட்டோர் கைகொடுக்க இந்திய அணி 8-1 என ஜெர்மனியை வீழ்த்தி, தொடர்ச்சியாக 3வது தங்கப் (1928, 1932, 1936) பதக்கத்தை தட்டிச் சென்றது. போட்டியை நடத்திய ஜெர்மனி, 33 தங்கம், 26 வெள்ளி, 30 வெண்கலம் என 89 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. அமெரிக்காவுக்கு 2வது இடம் (24 தங்கம், 21 வெள்ளி, 12 வெண்கலம்) கிடைத்தது.
18 hour(s) ago
18 hour(s) ago
03-Oct-2025
02-Oct-2025