மேலும் செய்திகள்
தமிழ் தலைவாஸ் அணி தோல்வி: புரோ கபடி லீக் போட்டியில்
20 hour(s) ago
உலக விளையாட்டு செய்திகள்
20 hour(s) ago
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
புதுடில்லி: புரோ லீக் ஹாக்கி தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டார்.சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் 5வது சீசன் நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, இதுவரை விளையாடிய 8 போட்டியில், 5 வெற்றி, 3 தோல்வி என 15 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. அடுத்து ஐரோப்பா செல்லும் இந்திய அணி, அர்ஜென்டினா (மே 22, 26), பெல்ஜியம் (மே 23, 25), ஜெர்மனி (ஜூன் 1, 8), பிரிட்டன் (ஜூன் 2, 9) அணிகளுடன் விளையாடுகிறது. இதற்கான 24 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டார்.இந்திய அணி: ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), ஹர்திக் சிங் (துணை கேப்டன்), ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பகதுார் பதக் (கோல்கீப்பர்), ஜர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், சுமித், சஞ்சய், ஜக்ராஜ் சிங், விஷ்ணுகாந்த் சிங், நீலகண்ட சர்மா, மன்பிரீத் சிங், ஷாம்ஷர் சிங், ராஜ்குமார் பால், முகமது ரஹீல் மவுசீன், மன்தீப் சிங், அபிஷேக், சுக்ஜீத் சிங், லலித் குமார், குர்ஜந்த் சிங், ஆகாஷ்தீப் சிங், அராய்ஜீத் சிங் ஹன்டல், பாபி சிங் தாமி.
20 hour(s) ago
20 hour(s) ago
03-Oct-2025
02-Oct-2025