உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / மலைக்க வைத்த மல்லேஸ்வரி: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்

மலைக்க வைத்த மல்லேஸ்வரி: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 27வது ஒலிம்பிக் போட்டி (2000, செப். 15 - அக். 1) நடந்தது. ஆஸ்திரேலிய பழங்குடியின தடகள வீராங்கனை கேத்தி பிரீமேன், ஒலிம்பிக் தீபம் ஏற்றிவைத்தார். 400 மீ., ஓட்டத்தில் தங்கத்தை தட்டிச் சென்றார்.டேக்வான்டோ, டிரையத்லான் உள்ளிட்ட போட்டிகள் ஒலிம்பிக்கில் அறிமுகமாகின. பெண்களுக்கான பளுதுாக்குதல் போட்டியும் முதன்முறையாக நடத்தப்பட்டது. இதில் இந்தியா சார்பில் கர்ணம் மல்லேஸ்வரி பங்கேற்றார். 69 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இவர், ஒட்டுமொத்தமாக 240.0 கிலோ பளுதுாக்கி ('ஸ்னாட்ச்' 100 + 'கிளீன் அண்ட் ஜெர்க்' 130) வெண்கலம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார். தவிர இது, ஒலிம்பிக் பளுதுாக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கமானது.கேமரூன், கொலம்பியா, லாட்வியா, சுலோவேனியா நாடுகள் முதன்முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்தன. பார்படாஸ், குவைத், கிர்கிஸ்தான், வடக்கு மேசிடோனியா, சவுதி அரேபியா, வியட்நாம் நாடுகள் முதன்முறையாக பதக்கப்பட்டியலில் இடம் பிடித்தன. 37 தங்கம், 24 வெள்ளி, 32 வெண்கலம் என 93 பதக்கம் வென்ற அமெரிக்கா முதலிடத்தை தட்டிச் சென்றது. அடுத்த இரு இடங்களை ரஷ்யா (32 தங்கம்), சீனா (28 தங்கம்) கைப்பற்றின. ஆஸ்திரேலியா (16 தங்கம்) 4வது இடம் பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ