உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பெடரேஷன் கோப்பையில் நீரஜ் சோப்ரா

பெடரேஷன் கோப்பையில் நீரஜ் சோப்ரா

புவனேஸ்வர்: தேசிய பெடரேஷன் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளார் ஒலிம்பிக், உலக சாம்பியன் நீரஜ் சோப்ரா.ஒலிம்பிக் (டோக்கியோ, 2021) தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்). தவிர 2023ல் உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டில் (2023) தங்கம் கைப்பற்றியுள்ளார். இந்த ஆண்டின் முதல் போட்டியாக, நாளை கத்தார் தலைநகர் தோகாவில் நடக்கவுள்ள 'டைமண்ட் லீக்' போட்டியில் பங்கேற்க உள்ளார்.அங்கிருந்து இந்தியா வரும் நீரஜ் சோப்ரா 26, புவனேஸ்வரில் மே 12-15ல் நடக்கவுள்ள தேசிய பெடரேஷன் கோப்பை தொடரில் களமிறங்குகிறார். கடைசியாக 2021, மார்ச் 17ல் இந்தியாவில் நடந்த போட்டியில் பங்கேற்ற இவர், மூன்று ஆண்டுக்குப் பின் மீண்டும் சொந்தமண்ணில் போட்டியில் பங்கேற்க உள்ளார். இதனை, நீரஜ் சோப்ரா பயிற்சியாளர் பர்டோனியட்ஸ் உறுதி செய்துள்ளார். தவிர 2023 ஆசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் கிஷோர் ஜெனாவும், பெடரேஷன் கோப்பையில் களமிறங்குகிறார். இதுகுறித்து இந்திய தடகள கூட்டமைப்பு வெளியிட்ட செய்தியில்,' புவனேஸ்வரில் மே 12ல் துவங்கும் பெடரேஷன் போட்டியில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா பங்கேற்க உள்ளனர்,' என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ