உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / விலகினார் நீரஜ் சோப்ரா * ஆசிய விளையாட்டில்...

விலகினார் நீரஜ் சோப்ரா * ஆசிய விளையாட்டில்...

புதுடில்லி: காயம் காரணமாக ஆசிய விளையாட்டு உட்பட நடப்பு சீசனில் அனைத்து போட்டிகளில் இருந்தும் விலகினார் நீரஜ் சோப்ரா.இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 28. ஒலிம்பிக் (2021, டோக்கியோ) தடகளம், உலக சாம்பியன்ஷிப்பில் (2023, புடாபெஸ்ட்) தங்கம் வென்ற முதல் இந்தியர். தவிர, பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) வெள்ளி வென்றார். சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் தடகளத்தில் தொடர்ச்சியாக 2 பதக்கம் வென்ற, ஈட்டி எறிதலில் 90 மீ., துாரத்துக்கும் மேல் எறிந்த முதல் இந்தியர் என பெருமை பெற்றவர்.சமீபத்தில் லாசேன் டைமண்ட் லீக் போட்டியில் 88.05 மீ., துாரம் எறிந்து, 'பார்மிற்கு' திரும்பினார். டைமண்ட் லீக் தடகளத்தின் 17வது சீசன், பைனலில் (செப். 4, 5, பெல்ஜியம்) பங்கேற்க தகுதி பெற்றார்.தவிர, வரும் ஆசிய விளையாட்டிலும் (செப். 19-அக். 4, ஜப்பான்) சாதிக்க காத்திருந்தார். இதனிடையே பயிற்சியின் போது, கணுக்கால் தசை நாரில் கிழிசல் ஏற்பட்டது. இதையடுத்து நடப்பு ஆண்டில் ஆசிய விளையாட்டு உட்பட மீதமுள்ள அனைத்து தொடர்களில் இருந்தும் விலகினார்.இதுகுறித்து நீரஜ் சோப்ரா 28, கூறுகையில்,'' கடினமான பயிற்சிக்குப் பின், சமீபத்தில் லாசேனில் சிறப்பாக செயல்பட்டதால் வரும் சீசனில் அசத்தலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். துரதிருஷ்டவசமாக கணுக்காலில் காயம் ஏற்பட்டது. டாக்டர் 'அட்வைஸ்' படி, மீதமுள்ள சீசனில் இருந்த விலக முடிவு செய்துள்ளேன். காயத்தில் இருந்து மீண்டு வருவதில் கவனம் செலுத்த உள்ளேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி