மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
02-Oct-2025
ஸ்டாவன்ஜர்: நார்வே செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, வைஷாலி, ஹம்பி பங்கேற்கின்றனர்.'விம்பிள்டன் ஆப் செஸ்' என்று அழைக்கப்படும் நார்வே செஸ் தொடரின் 12வது சீசன் வரும் மே 27 முதல் ஜூன் 7 வரை நடக்கவுள்ளது. இதில் இந்தியா சார்பில் ஆண்கள் பிரிவில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா மட்டும் பங்கேற்கிறார். சமீபத்தில் போலந்தில் நடந்த 'சூப்பர்பெட் ரேபிட்-பிளிட்ஸ்' தொடரில் 4வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா, 2022ல் நடந்த நார்வே செஸ் சர்வதேச ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.இத்தொடரில் உலகின் 'நம்பர்-1' நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், 'நம்பர்-3' அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, 'நடப்பு உலக சாம்பியன்' சீனாவின் டிங் லிரென் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர்.நார்வே செஸ் தொடரில் முதன்முறையாக பெண்கள் பிரிவு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் இந்தியா சார்பில் கொனேரு ஹம்பி, பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி, 'நடப்பு உலக சாம்பியன்' சீனாவின் ஜு வென்ஜுன் உள்ளிட்டோர் விளையாடுகின்றனர்.'ஐந்து முறை உலக சாம்பியன்' இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் கூறுகையில், ''முதன்முறையாக பெண்களுக்கான போட்டிகள் நடத்தப்படுவதை வரவேற்கிறேன்,'' என்றார்.
03-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025