உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஓவியம்... காவியம் * ஒலிம்பிக் கவுன்ட் டவுன்

ஓவியம்... காவியம் * ஒலிம்பிக் கவுன்ட் டவுன்

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், 5வது ஒலிம்பிக் போட்டி (1912, ஜூலை 5---22) நடந்தது. இதில் முதன்முறையாக 5 கண்டங்களை சேர்ந்தவர்களும் விளையாடினர்.'எலக்ட்ரானிக்' முறையில் நேரம் பார்க்கும் கருவிகள் உள்ளிட்ட பல புதுமைகள் புகுத்தப்பட்டன. முதன்முறையாக ஓவிய போட்டி இடம் பெற்றது. அமெரிக்காவின் வால்டர் வினன்ஸ் துப்பாக்கி சுடுதலில் வெள்ளியும், சிற்பம் செதுக்குதலில் தங்கம் வென்று, இரண்டு வெவ்வேறு துறைகளில் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.வெப்பம் அதிகம்மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற போர்ச்சுகல் நாட்டு வீரர் பிரான்சிஸ்கோ லசோரா மாரடைப்பால் மரணம் அடைந்தார். நவீன ஒலிம்பிக் வரலாற்றில், போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே மரணம் அடைந்த முதல் வீரர் இவரே. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உடலில் மெழுகு தடவி பங்கேற்றார். இதனால் வியர்வை வெளியேற முடியாத நிலை ஏற்பட மரணத்தை தழுவினார்.எக்ஸ்டிராஸ்11 மணி நேர மல்யுத்தம்இந்த ஒலிம்பிக்கில் மார்டின் கிளெய்ன்(ரஷ்யா], ஆல்பிரட் அசிகெய்னன்(பின்லாந்து) மோதிய கிரிக்கோரோமன் பிரிவு மல்யுத்தப் போட்டி 11 மணி நேரம் 40 நிமிடங்கள் நடந்தது. இது தான் உலகின் மிக நீண்ட நேரம் நடந்த மல்யுத்த போட்டி இதில் கிளெய்ன் வெற்றி பெற்றார். ஆனாலும் உடல் சோர்வு காரணமாக பைனலில் பங்கேற்க முடியாத இவர், தங்கம் வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை