உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஹாக்கியில் முதல் தங்கம் * ஒலிம்பிக் கவுன்ட் டவுண்-28

ஹாக்கியில் முதல் தங்கம் * ஒலிம்பிக் கவுன்ட் டவுண்-28

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் (1928, ஜூலை 28 - ஆக. 12) நடந்த 9வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. ஜோதி ஏற்றும் முறை அறிமுகமானது. 'சம்மர்' ஒலிம்பிக் என்ற பெயர் வழக்கத்துக்கு வந்தது.ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. 'ஹாக்கி மந்திரவாதி' என்றழைக்கப்பட்ட இந்தியாவின் தயான்சந்த் மொத்தம் 14 கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார் ஆஸ்திரியா, டென்மார்க், சுவிட்சர்லாந்து அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகளில் 'ஹாட்ரிக்' கோலடித்த இவர், நெதர்லாந்துக்கு எதிரான பைனலிலும் வரிசையாக மூன்று கோலடித்து அசத்தினார். இதன்மூலம் ஒரே ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் நான்கு முறை 'ஹாட்ரிக்' கோலடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். இந்திய அணி ஒலிம்பிக் தொடரில் தனது முதல் தங்கம் வென்றது.மீண்டும் ஜெர்மனிமுதல் உலக போர் காரணமாக 1920, 1924ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஜெர்மனிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தடைக்கு பின் மீண்டும் ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஜெர்மனி, 10 தங்கம், 7 வெள்ளி, 14 வெண்கலம் என 31 பதக்கங்களை கைப்பற்றி 2வது இடம் பிடித்தது. அமெரிக்கா (22 தங்கம், 18 வெள்ளி, 16 வெண்கலம்) முதலிடத்தை தட்டிச் சென்றது. ஒரே ஒரு தங்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 24வது இடத்தை அயர்லாந்து, நியூசிலாந்து, ஸ்பெயின், உருகுவேயுடன் பகிர்ந்து கொண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ