மேலும் செய்திகள்
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
02-Oct-2025
செஸ்: பிரக்ஞானந்தா டிரா
02-Oct-2025
கோல்கட்டா: புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் அணி 67-30 என உ.பி., அணியை வீழ்த்தியது.இந்தியாவில் புரோ கபடி லீக் 10வது சீசன் நடக்கிறது. இதுவரை ஜெய்ப்பூர், புனே, டில்லி, குஜராத் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கான இடத்தை உறுதி செய்துள்ளன.கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' ஜெய்ப்பூர் அணி, உ.பி., அணியை எதிர்கொண்டது. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் அணிக்கு அர்ஜுன் தேஷ்வால் நம்பிக்கை தந்தார். முதல் பாதி முடிவில் ஜெய்ப்பூர் அணி 23-11 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியிலும் அபாரமாக ஆடிய ஜெய்ப்பூர் அணியினர், உ.பி., வீரர்களை நான்கு முறை 'ஆல்-அவுட்' செய்தனர். ஆட்டநேர முடிவில் ஜெய்ப்பூர் அணி 67-30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஜெய்ப்பூர் அணிக்கு அர்ஜுன் தேஷ்வால் (20 புள்ளி) கைகொடுத்தார். உ.பி., அணிக்கு ககனா கவுடா (10 புள்ளி) ஆறுதல் தந்தார்.இதுவரை விளையாடிய 20 போட்டியில் 14 வெற்றி, 3 'டை', 3 தோல்வி என 82 புள்ளிகளுடன் ஜெய்ப்பூர் அணி முதலிடத்துக்கு முன்னேறியது.
02-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025