உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / இரண்டாவது சுற்றில் ராஹிமோவா

இரண்டாவது சுற்றில் ராஹிமோவா

ஏஞ்சர்ஸ்: பிரான்சில் பெண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷ்யாவின் ராஹிமோவா, சக வீராங்கனை கோர்னீவாவை எதிர்கொண்டார். இதில் ராஹிமோவா 6-1, 6-1 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் உக்ரைனின் வெரோனிகா, ரஷ்யாவின் சரயீவாவை 6-1, 6-1 என வீழ்த்தினார்.கால்பந்து போட்டி ரத்துஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் 'டச் லீக்' கால்பந்து தொடர் நடக்கிறது. ஆம்ஸ்டர்டாமில் நடந்த லீக் போட்டியில் அஜாக்ஸ், குரோனிங்கென் அணிகள் மோதின. போட்டியின் 5வது நிமிடத்தில் அஜாக்ஸ் அணி ரசிகர்கள், மைதானத்தில் தெற்குப் பகுதியில் பட்டாசுகளை வெடிக்கத் துவங்கினர். மைதானத்திற்குள் பட்டாசுகளை எறிந்தனர். இதனால் போட்டி 5 நிமிடம் நிறுத்தப்பட்டது. வாண வேடிக்கை தொடர்ந்ததால் போட்டியை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இப்போட்டி நாளை மீண்டும், ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட உள்ளது.வெ.இண்டீஸ் - நியூசி., மோதல்நியூசிலாந்து சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் இன்று கிறைஸ்ட்சர்ச் நகரில் துவங்குகிறது. ஏற்கனவே முடிந்த ஒருநாள் (3-0), 'டி-20' (3-0) தொடர்களை நியூசிலாந்து அணி கைப்பற்றியது. டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் மீண்டு வர முயற்சிக்கலாம்.எக்ஸ்டிராஸ்* சையது முஷ்தாக் அலி டிராபி 'டி-20' தொடரில் இன்று ஆமதாபாத்தில் நடக்கும் 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், கர்நாடக அணிகள் மோதுகின்றன.* சீனாவின் செங்டுவில் சர்வதேச டேபிள் டென்னிஸ் கலப்பு அணிகளுக்கான உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் இந்திய அணி 4-8 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோல்வியடைந்தது. * இந்தியாவில் டென்னிஸ் பிரிமியர் லீக் தொடரின் 4வது சீசன் குஜராத் மாநிலம், பல்கலை டென்னிஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. * சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் இந்தியாவின் சுமித் நாகல், ஒரு இடம் பின்தங்கி, 277 வதாக உள்ளார். * டில்லியில் 'இந்தியன் பிக்கிள்பால் லீக்' தொடர் நேற்று துவங்கியது. சென்னை, பெங்களூரு உட்பட 6 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த போட்டிகளில் லக்னோ அணி 5-1 என பெங்களூருவை வென்றது. ஐதராபாத் அணி 4-2 என குர்கான் அணியை வீழ்த்தியது.* பெண்களுக்கான ஸ்னுாக்கர் 'ஐரிஸ்' ஓபன் தொடர் அயர்லாந்தில் நடக்கிறது. இந்தியா சார்பில் பங்கேற்ற அனுபமா, அரையிறுதியில் சீனாவின் பய் யுலுவிடம் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.* ஆமதாபாத்தில் பாதி மாரத்தான் (21 கி.மீ.,) நடந்தது. 24,000 பேர் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் நிஹில் சிங், பெண்கள் பிரிவில் அஷ்வினி வெற்றி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை