வீட்டு சுவர் இடிந்து இருவர் சாவு
அரியலுார்: அரியலுார் மாவட்டம், துளாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன், 46. இவர், தன் வீட்டின் கூரையை புதிதாக மாற்றி அமைக்க முடிவு செய்தார். இதற்காக, கூரை வேயும் தொழிலாளியான, அதே கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன், 60, என்பவருடன் சேர்ந்து கூரையை பிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டின் மண் சுவர் உட்பக்கமாக இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கி ராமச்சந்திரன் இறந்தார். அன்பழகன் அரியலுார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஜெயங்கொண்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.