உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை புறநகர் பகுதிகளில் பொங்கல் விற்பனை ஜோர்

செங்கை புறநகர் பகுதிகளில் பொங்கல் விற்பனை ஜோர்

செங்கல்பட்டு : சென்னை புறநகர் பகுதிகளான மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று அதிகாலை சுற்றியுள்ள வீட்டின் இருந்து தேவையற்ற பொருள்களை கொளுத்தி போகி பண்டிகை கொண்டாடினர்.செங்கல்பட்டு அடுத்த, பொங்கல் விழா கொண்டாடுவதற்கு தேவையான புதுப்பானை, கரும்பு, மஞ்சள் கொத்து, தேங்காய், பழங்கள், பூசணிக்காய், பூக்கள் மற்றும் வெற்றிலை, வாழைப்பழம் உள்ளிட்ட பூஜைக்கு தேவையான பொருட்களை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.ஒரு கட்டு கரும்பு 500 - 600 ரூபாய்க்கும், மஞ்சள் செடி 10 - 30 ரூபாய்க்கும், வாழை இலை 10 ரூபாய்க்கும், மஞ்சள் பூசணிக்காய் கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி