உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பைக் மீது ரெடிமிக்ஸ் லாரி மோதி ஒருவர் பலி

பைக் மீது ரெடிமிக்ஸ் லாரி மோதி ஒருவர் பலி

குரோம்பேட்டை:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் முத்துவேல், 27. ராஜகீழ்ப்பாக்கத்தில் தங்கி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை செய்து வந்தார். இவரது நண்பர், திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த தேவா, 27.நேற்று அதிகாலை, 12:50 மணிக்கு, இருவரும், இருசக்கர வாகனத்தில் திருநீர்மலை சாலை வழியாக பல்லாவரம் நோக்கிச் சென்றனர். அப்போது, பின்னால் வந்த ரெடிமிக்ஸ் லாரி மோதியது.நிலைதடுமாறி கீழே விழுந்த முத்துவேல் மீது லாரியின் சக்கரம் ஏறியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார். குரோம்பேட்டை போலீசார் விரைந்து வந்து தேவாவை மீட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். ரெடிமிக்ஸ் லாரி ஓட்டுனரான மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்த தங்கபாண்டி, 30, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ