உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகை திருட்டு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வேதாச்சலம், 64. இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.வேதாச்சலம், நேற்று முன்தினம் காலை, குடும்பத்துடன் திருப்போரூரில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றார்.மாலை மீண்டும்வீட்டிற்கு வந்த போது, வீட்டின் முன்பக்ககதவு உடைக்கப்பட்டு இருந்தது.அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 27.5 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.இது குறித்து, செங்கல் பட்டு தாலுகா காவல் நிலையத்தில், வேதாச்சலம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை