மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
9 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
9 hour(s) ago
திருப்போரூர்: திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே, ஹிந்து முன்னணி சார்பில், நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட பொதுச்செயலர் ராஜசேகர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், திருப்போரூர் தெற்கு ஒன்றிய தலைவர் பாலமுரளி, வடக்கு ஒன்றிய தலைவர் ஜெய்சங்கர் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில், கோவில்களை சீரழிக்கும் அரசு, கோவிலை விட்டு வெளியேற வேண்டும் உள்ளிட்ட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி, பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.இதையடுத்து, திருப்போரூர் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் வைத்து, மாலையில் விடுவித்தனர்.அதேபோல், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஹிந்து கோவில்களில், தரிசன கட்டணம், அர்ச்சனை, நேர்த்திக்கடன் என, பல பெயர்களில் கட்டண கொள்ளை அடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்கள், இடிந்து விழும் நிலையில் சீரழிந்து வருவதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.மேலும், மசூதி, சர்ச் ஆகியவற்றை சீரமைக்க மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்யும் அரசு, கோவிலை பராமரிக்க செலவு செய்ய தயங்குவது ஏன் என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கேள்வி எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.அதேபோல், மாநில செயலர் ரவீந்திரன் தலைமையில், திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் கோவில் மலையடிவாரத்திலிருந்து பேருந்து நிலையம் நோக்கி, ஆர்ப்பாட்டம் நடத்த பேரணி சென்ற, 16 பேரை திருக்கழுக்குன்றம் போலீசார், கைது செய்து, மாலை விடுவித்தனர்.
9 hour(s) ago
9 hour(s) ago