உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வண்டலூர் வக்கீல் வீட்டில் 29 சவரன் நகை ஆட்டை

வண்டலூர் வக்கீல் வீட்டில் 29 சவரன் நகை ஆட்டை

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வண்டலூர் ஊராட்சி சிங்கார தோட்டம் இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கமலபிரியா. சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை ராமலிங்கம், 54, கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக, பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.இதையடுத்து, வீட்டில் இருந்த தாய் தமிழரசி, தம்பி லோகேஷ் உடன் வீட்டை பூட்டிவிட்டு, திண்டிவனத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று விட்டு, இரவு 8:00 மணிக்கு வீடு திரும்பினர்.அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, 29 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.இது தொடர்பாக, ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் படி, ஓட்டேரி போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை