உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சித்தாமூரில் குட்கா விற்ற 3 கடைகளுக்கு சீல்

சித்தாமூரில் குட்கா விற்ற 3 கடைகளுக்கு சீல்

சித்தாமூர், :செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் சித்தாமூர் போலீசார், சித்தாமூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கடைகளில், நேற்று ஆய்வு செய்தனர்.இதில், சித்தாமூர் அடுத்த மழுவங்கரணை கிராமத்தைச் சேர்ந்த சேகர், 52, சுந்தர், 45, ராஜி, 63, ஆகிய மூன்று பேரும், தனித்தனியே கடை வைத்துள்ளனர்.இங்கு, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, தலா 30 பாக்கெட் குட்காவை, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மூன்று கடைகளுக்கும், தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து, கடைகளுக்கு சீல் வைத்தனர்.பின், சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிந்து, மூன்று பேரையும் கைது செய்து, செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில், சேகர், சுந்தர் இருவரும் மதுராந்தகம் சிறையில் அடைக்கப்பட்டனர். ராஜி, உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக, நீதிமன்ற பெயிலில் விடுவிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை