மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
3 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
3 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
3 hour(s) ago
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சியில் வீடு கட்டுவதற்கு பள்ளம் தோண்டியபோது சுவாமி சிலைகள் கிடைத்தன.முதலில் சிவலிங்கமும், அதை தொடர்ந்து முருகன், பெரிய நந்தி, சிறிய நந்தி, பலிபீடம் என, ஒன்றன்பின் ஒன்றாக கிடைத்தன. இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியது.வண்டலுார் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.இது குறித்து, வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா கூறியதாவது:நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன் சித்தர் ஒருவர், கோவில் கட்டி வழிபட்டு வந்ததாகவும், அவர் மறைவுக்கு பின் அங்கிருந்த கோவில், வீடு ஆகியவை பாழடைந்து, தரைமட்டமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.தற்போது, அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, அதில் வீடு கட்ட முயற்சி செய்யும்போது, ஏற்கனவே இருந்த பழைய சிலைகள் கிடைத்துள்ளன.இந்த இடம் பட்டா இடமா அல்லது ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடமா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். மேலும் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் குறித்து, தொல்பொருள் ஆராய்ச்சி துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.அவர்கள் வந்து ஆய்வு செய்த பின், சிலைகள் கையகப்படுத்தப்படும். அதுவரை கட்டுமான பணிகள் மேற்கொள்ளக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago