உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அண்ணா நகரில் பெண்ணிடம் 6 சவரன் செயின் பறிப்பு

அண்ணா நகரில் பெண்ணிடம் 6 சவரன் செயின் பறிப்பு

அண்ணா நகர்:அண்ணா நகரில், தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் செயின் பறித்த மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை, அண்ணாநகர், 19வது தெருவைச் சேர்ந்தவர் நாகம்மாள், 67. இவர், நேற்று முன்தினம் இரவு கடைக்குச் சென்று விட்டு, அண்ணா நகர்,'ஜி பிளாக்' வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார்.அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் நாகம்மாள் பின்னால் சென்று, அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து நாகம்மாள், அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை