மேலும் செய்திகள்
மாட்டு வண்டியில் மணல் கடத்திய 3 பேர் கைது
23-Aug-2024
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த முதுகரை கிராமத்தில், காட்டுப் பகுதியில் உள்ள ஏரி உபரி கால்வாயில், அழுகிய நிலையில் ஆண் சடலம் இருந்தது. அந்தப் பகுதியில் மாடு மேய்க்க சென்றவர்கள், சடலத்தை கண்டு, சித்தாமூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் டி.எஸ்.பி., மேகலா மற்றும் சித்தாமூர் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.முதற்கட்ட விசாரணையில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் என்றும், நான்கு நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது, மேலும் இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
23-Aug-2024