உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பள்ளத்தில் கவிழ்ந்த கார்..

பள்ளத்தில் கவிழ்ந்த கார்..

கனகம்மாசத்திரம்: சென்னையில் இருந்து திருப்பதிக்கு தினசரி செய்தித்தாள்கள் வாகனம் வாயிலாக அனுப்பப்படுகிறது. நேற்று அதிகாலை திருப்பதிக்கு மாருதி இகோ வாகனத்தில் ஆங்கில செய்தித்தாள்கள் அனுப்பப்பட்டன.அதிகாலை, 4:30 மணியளவில் சென்னை --திருப்பதி தேசிய நெடுஞ்சாலை கனகம்மாசத்திரம் அடுத்த நெடும்பரம் அருகே வந்த போது முன் சென்ற லாரியை முந்தியது.அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை