உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தெருவில் உலாவிய வளர்ப்பு நாய் ரூ.50,000 அபராதம் விதிப்பு

தெருவில் உலாவிய வளர்ப்பு நாய் ரூ.50,000 அபராதம் விதிப்பு

தாம்பரம்:வளர்ப்பு நாயை தெருவில் விட்டு மக்களை அச்சுறுத்துவதாக வந்த புகாரை அடுத்து, நாய் உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேற்கு தாம்பரம், திருவேங்கடம் நகரைச் சேர்ந்தவர் விமலா, 39. இவரது எதிர் வீட்டில் வசிக்கும் திவ்யா என்பவர், 'ஜெர்மன் ஷெப்பர்ட்' இனத்தை சேர்ந்த நாயை வளர்த்து வருகிறார்.அதை வீட்டில் கட்டி வைக்காமல், தெருவில் சுற்ற விட்டார். அந்த நாய், தெரு நாய்களையும், மாடுகளையும் துரத்துகிறது. துப்புரவு பணியாளர்களையும், தெருவில் நடந்து செல்வோரையும் அச்சுறுத்துவதாக, தாம்பரம் மாநகராட்சியில், விமலா புகார் அளித்தார்.இப்புகாரின் அடிப்படையில், கால்நடை மருத்துவர் சக்தி தேவி மற்றும் துப்புரவு அலுவலர், ஆய்வாளர்கள் நேற்று, நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதில், நாய் வளர்ப்பவர், மாநகராட்சியில் உரிமம் பெறவில்லை என கண்டறியப்பட்டது. தொடர்ந்து, வளர்ப்பு நாயை பொது வெளியில் திரிய விடுவது, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதற்காக, நாயின் உரிமையாளர் திவ்யாவுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். 'நாய் வளர்ப்பதில் விதிகளை கடைப்பிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ