உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கஞ்சா விற்ற வழக்கில் தலைமறைவு நபர் கைது

கஞ்சா விற்ற வழக்கில் தலைமறைவு நபர் கைது

செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில், கடந்த பிப்ரவரி மாதம் கஞ்சா விற்பனை செய்த, திம்மாவரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், 21, செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த யுவன்சங்கர்ராஜா, 20, ஆகாஷ், 23, உள்ளிட்டோரை, செங்கல்பட்டு தாலுகா போலீசார் கைது செய்தனர்.தப்பிச்சென்ற செங்கல்பட்டு அடுத்த குண்ணவாக்கம் பகுதியை சேர்ந்த வள்ளிகண்ணன் மகன் அமல்ராஜ் என்ற நபரை, போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், தாம்பரம் அடுத்த கேம்ப் ரோடு பகுதியில் சுற்றித்திரிந்த அமல்ராஜை, செங்கல்பட்டு தாலுகா போலீசார், நேற்று கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை