உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை விவசாயிகளுக்கு ரூ.140 கோடி வட்டியில்லா கடன் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வழங்க இலக்கு

செங்கை விவசாயிகளுக்கு ரூ.140 கோடி வட்டியில்லா கடன் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வழங்க இலக்கு

செங்கல்பட்டு காஞ்சிபுரம் மத்தியகூட்டுறவு வங்கியின் கீழ், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் வங்கிகள் மற்றும் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன.செங்கல்பட்டு மாவட்டத்தில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் 20 கிளைகளும், 106 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மூன்று கூட்டுறவு நகர வங்கிகள், 11 நகர கூட்டுறவு சங்கங்கள் இயங்குகின்றன.

சொர்ணவாரி பருவம்

தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்களும் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும், செங்கல்பட்டு மாவட்ட இணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில், விவசாயம் செய்யப்படுகிறது.இதில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகா பகுதிகளில், விவசாயம் அதிகமாக செய்யப்படுகிறது.பாலாற்று பகுதியில் உள்ளவர்கள், ஆழ்துளை கிணறு, கிணற்று நீர் மற்றும் ஏரி பாசனம் வாயிலாக சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களில், நெல் சாகுபடி செய்கினறனர்.

பயிர்க்கடன்

இதுமட்டும் இன்றி, கரும்பு, மணிலா, கொடிவகை பயிர்கள், தர்ப்பூசணி உள்ளிட்டவையும்சாகுபடி செய்யப்படுகின்றன.மாவட்டத்தில், 2022 - 23 ம் ஆண்டு, பயிர்க்கடனாக 100 கோடி ரூபாய் வழங்க, கூட்டுறவுத்துறை இலக்கு நிர்ணயித்தது. ஆனால், 14,790 விவசாயிகளுக்கு, 105.65 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது.அதேபோல், 2023 - 24ம் ஆண்டு, பயிர்க்கடனாக 125 கோடி ரூபாய் வழங்க, கூட்டுறவுத்துறை இலக்கு நிர்ணயித்தது. அதில், 114.12 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.இந்த ஆண்டு, பயிர்க்கடனாக 140 கோடி ரூபாயும், கறவை மாடு பராமரிப்பு கடனாக 35 கோடி ரூபாயும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்ய, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு கடந்த ஏப்., மாதத்தில் இருந்து கடன் வழங்கப்பட்டு வருகிறது. கால்நடைகளுக்கான பராமரிப்பு கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது.இதனால், சிறு விவசாயிகள் முதல் பெரிய விவசாயிகள் வரை, கிராம நிர்வாக அலுவலரிடம், விவசாய நிலங்களின் சிட்டா, அடங்கல் ஆகியவற்றை பெற்று, கூட்டுறவு வேளாண்மை வங்கிகளில் பயிர்க்கடன் பெறலாம்.நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர்க்கடன் பெற, வங்கிகளை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகளுக்கு, கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கங்கள் வாயிலாக பயிர்க்கடன் வழங்கி வருகிறோம். விவசாயிகள் பெறும் கடன் தொகையை, ஓராண்டுக்குள் கட்டினால் வட்டியில்லை. அதன்பின், வட்டியுடன் சேர்த்து கடன் தொகை செலுத்த வேண்டும்.- கூட்டுறவுத்துறை அதிகாரிகள்,செங்கல்பட்டு மாவட்டம்.

கடன் எவ்வளவு?

பயிர் பரப்பு கடன் தொகை (ரூபாயில்)நெல் 1 ஏக்கர் 34,500உளுந்து 1 ஏக்கர் 15,400மணிலா 1 ஏக்கர் 30,800கரும்பு 1 ஏக்கர் 58,500


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ