உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இயன்முறை சிகிச்சை வாகனம்

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இயன்முறை சிகிச்சை வாகனம்

செங்கல்பட்டு,:மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்காக, நடமாடும் இயன்முறை சிகிச்சை அளிப்பதற்கான வாகனத்தை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று துவக்கி வைத்தார்.செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தனியார் தன்னார்வ அமைப்பின் வாயிலாக, மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்காக, நடமாடும் இயன்முறை சிகிச்சை அளிக்கும் வசதிகொண்ட வாகனத்தை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று துவக்கி வைத்தார்.இந்த அமைப்பினர், 2022ம் ஆண்டு, காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், 18 ஊராட்சிகளில் உள்ள மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.தொடர்ந்து, திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், 20 குழுந்தைகளுக்கு வீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு வாகனம் வாயிலாக சென்று, மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர் என, தன்னார்வ அமைப்பின் குழுவினர்தெரிவித்தனர்.இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு, மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா மற்றும் தன்னார்வ அமைப்பினர்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ