உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மரம் வளரும் இடமாக மாறிய அங்கன்வாடி மைய கட்டடம்

மரம் வளரும் இடமாக மாறிய அங்கன்வாடி மைய கட்டடம்

அச்சிறுபாக்கம், :அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 15வது வார்டுக் குட்பட்ட வஜ்ஜிராபுரத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன் அங்கன் வாடி மைய கட்டடம் கட்டப்பட் டது. இங்கு, 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயில்கின்றனர்.கடந்த சில ஆண்டுகளாகமரங்கள் வளர்ந்து கட்டடம் விரிசல் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், ஓராண்டாக கைவிடப்பட்டுள்ளது.தற்போது, தற்காலிகமாக மாற்று கட்டடத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. தற்காலிக இடத்தில் போதிய அளவு இட வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி உள்ளதால், அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகள் அதிகளவில் செல்வதில்லை.எனவே, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, அதே பகுதியில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டடம் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை