உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின் இணைப்புக்கு லஞ்சம் உதவி மின்பொறியாளர் கைது

மின் இணைப்புக்கு லஞ்சம் உதவி மின்பொறியாளர் கைது

திருவள்ளூர், : திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த வெடியங்காடு புதுார் மேடு துணை மின்நிலையத்தில் சுரேஷ், 37, என்பவர் உதவி மின்பொறிலயாளராக பணியாற்றி வருகிறார்.விடியங்காடு கிராமத்தை சேர்ந்த பாபு, 40, என்பவர், விசைத்தறி தன் கூடத்திற்கு கூடுதல் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதற்கு சுரேஷ், 6,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பாபு, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தல்படி, நேற்று மின்வாரிய அலுவலகம் சென்ற பாபு, அங்கிருந்த சுரேஷிடம் பணம் வழங்கினார். சுரேஷ், மின் கம்பியாளர்கள் நித்தியானந்தம் மற்றும் சண்முகத்திடம் அளிக்கும் படி கூறியுள்ளார். அவர்களிடம் பாபு 6,000 ரூபாய் வழங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார் அவர்களை பிடித்தனர். தொடர்ந்து, மூவரையும் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை