| ADDED : ஜூலை 23, 2024 01:34 AM
செய்யூர், இடைக்கழிநாடு பேரூராட்சியில், மாதாந்திர பேரூராட்சி கூட்டம், செயல் அலுவலர் மகேஷ்வரன், 32, தலைமையில், நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் சம்யுக்தா, 27, துணைத் தலைவர் கணபதி, 50, உள்ளிட்ட 19 கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.கூட்டம் துவங்கும் முன், அனைத்து கவுன்சிலர்களும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என, செயல் அலுவலர்தெரிவித்துள்ளார்.கூட்டத்தை துவங்குங்கள்; பின் பதிவேட்டில் கையெழுத்து வாங்கலாம் என, துணைத் தலைவர் கணபதி தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால், செயல் அலுவலருக்கும், துணைத் தலைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த துணைத் தலைவர் கணபதி, செயல் அலுவலர் மகேஷ்வரனை தாக்கினார்.பின், கூட்டம் நிறுத்தப்பட்டது. செயல் அலுவலர் மகேஷ்வரன் அளித்த புகாரின்படி, சூணாம்பேடு போலீசார் வழக்குப் பதிந்து, துணைத் தலைவர் கணபதியை கைதுசெய்து, செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.